ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இராது .
சீலை இல்லன்னு சின்னாயி வீட்டுக்கு போனாளாம்,
அவ ஈச்சம்பாயை கட்டிண்டு எதிர்க்க வந்தாளாம்.
ஆச்சானுக்கு பீச்சானாம்,
மதனிக்கு உடன் பிறந்தானம் .
உடன் பிறந்தே கொல்லும் வியாதி
பாவம்னு பழம் புடவை கொடுத்த ,
இழுத்து இழுத்து முழம் போட்டாளாம்.
புளியங்காயில் புளிப்பை புகுத்த முடியமா ?
வடையை தட்ட சொன்னாளா ?
துளையை எண்ண சொன்னாளா?
மாடு முன்னாடி போனா ,
கன்னுக்குட்டி பின்னாடி போகும் .
கட்டோடு கரும்பு இருந்தா
புத்தோடு எறும்பு வரும் .
இருந்த இடம் பள்ளம் .
எழுந்திருக்க சொல்றியே ,
என் பாவம் கொட்டிகறேயே.
அண்ணா எப்போ சாவான் ,
திண்ணை எப்போ காலி ஆகும் ?
காக்கா உட்கார பனம் பழம் விழுந்ததாம் .
குருவி தலைலே பனங்காய் வைச்சாப்போல.
குருவி கூட்டை கலைச்சாபோல.
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை ,
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை .
ஆடு நனையுதே என்று ,
ஓநாய் அழுததாம் .
மூக்கு உள்ளவரை சளி இருக்கும் .
(குஞ்சம்மா அத்தை சொன்னது )
அவ அவனுக்கு அரிச்ச ,
அவ அவன்தான் சொரிஞ்சுக்கணும்
(குஞ்சம்மா அத்தை சொன்னது )
வாத்தியார் பிள்ளை மக்கு ,
போலீஸ்காரன் பிள்ளை திருடன் .
(அப்பா அடிக்கடி சொல்வது )
கூரைலே சோற்றை இறைத்தால் ,
ஆயிரம் காக்கை கொத்த வரும் .
சாண் பிள்ளை ஆனாலும் , ஆண் பிள்ளை .
அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு .
அத்தைக்கு மருமாள் , அடைக்கு வெல்லம்.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா ?
ஆடு பகை , குட்டி உறவு .
( கிழே உள்ளவை அப்பா அடிக்கடி சொல்வது )
காலுக்கு உதவாத செருப்பை கழட்டி தூர ஏறி .
அழகு சோறு போடுமா ?
பகலிலேயே பசு மாடு கண்ணுக்கு தெரியாது .
தாய் எட்டடி பாய்ந்தால் , குட்டி பதினாறு அடி பாயும் .
கஞ்சி வரதப்பா , எங்கே வரதப்பா ?
ஆக்க பொறுத்தவனுக்கு,ஆற பொறுக்கலையே .
மீண்டும் மற்றவை :
==================
அடுப்படியே கோவில் , ஆம்படையானே தெய்வம் .
தாய் அறியாத சூலுண்டா ?
ஒருவர் அறிந்தால் ரகசியம் ,
இருவர் அறிந்தால் அம்பலம் .
பூனை கண்ணை மூடினா,
உலகம் அஸ்தமித்து விடுமா ?
அரை பணம் கொடுத்து ஆட சொன்னாளாம் ,
ஒரு பணம் கொடுத்து ஓய சொன்னாளாம் .
தும்பை விட்டு வாலை பிடிபாளோ?
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு ,
அவசரக்காரனுக்கு அறிவு மட்டு .
தன் மனுஷா அழ அழ சொல்லுவா ,
பிற மனுஷா சிரிக்க சிரிக்க சொல்லுவா .
தாயும் பிள்ளையும் ஒன்னானாலும் ,
வாயும் வயிறும் வேறு வேறு .
கொக்குக்கு ஒண்ணே மதி .
சுருங்க சொன்னாலும் ,
விளங்க சொல்லு .
காஞ்ச மாடு கம்புல விழுந்தா போல .
கழுதைக்கு தெரியுமா , கற்பூர வாசனை .
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?
காக்கா கான்னு கத்திதாம்,
அழலென்னு ஆம்படையான கட்டிண்டாளாம்.
கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை .
முத்தத்து முருங்கை பூ ,
முதுகிலே விழுந்து ,
முதுகெல்லாம் வலிச்சதாம் .
தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும் .
காரியம் ஆகும் வரை காலை பிடி .
நாய் வித்த காசு குறைக்குமா ?
சாது சாதுன்கர சன்யாசிக்கு,
ஊருக்கு நாலு பிள்ளையாம் .
சூரியனை பார்த்து நாய் குறைதாப் போல.
நக்க வாயன் தேடி வச்சான் ,
நார வாயான் அழிக்க வந்தான் .
அவர் அவர் கவலையை அவர் அவர் படணும்,
அடுத்தவர் பட முடியுமா ?
பொய் சொன்னாலும் பொருத்தமாய் சொல் .
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது .
விரலுக்கு தக்க வீக்கம் இருக்கணும் .
பேய்க்கு வாக்கபட்டா ,
புளிய மரத்திலே ஏறி ஆகணும் .
உப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை .
காசையும் கொடுத்து , தேளையும் கொட்டிண்டாளம்.
குளத்து மேல கோபித்துகொண்டு ,
கால் கழுவாமல் போனானாம் .
அடியேங்க ஆம்படையானை காணோம் ,
பிள்ளை பேரு சந்தானகோபலனாம் .
கூட்டத்திலே கோவிந்தா போடாதே .
குதிரை கொள்ளுன்னா வாயை திறக்குமாம் ,
புல்லுன்ன வாயை மூடுமாம் .
ஆடியிலே காத்தடிச்சா ,
ஐப்பசியிலே மழை வருமா ?
ஏறின ஏணியை எட்டி உதைத்தது போல ,
அண்ணா கிணத்திலே விழுந்துட்டான்ன
தம்பி , அண்ணா வேஷ்டி எல்லாம் எனக்கு தான்
என்றானாம் .
ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான் ,
கண்ணு புளிச்சை எல்லாம் போசுன்னாளம்.
கொழுந்தனை அடிச்ச அடிலே ,
பொண்டாட்டி சரியாயிட்டாளாம்.
முந்தரி கொட்டை மாதிரி ,
முந்திண்டு வராதே .
நரிக்கு நாட்டாமை கொடுத்தா போல .
சாதுப்பசுவை கொட்டில்லே கட்டு ,
முரட்டு பசுவை எர்ல கட்டு .
அப்பம் சுட்டு கூழா போச்சு,
தொன்னை கட்டிக்கோ பிராமணா
என்றாளாம்.
ஆடதெரியாத தாசி , முற்றம் கோணல் என்றாளாம்.
பார்த்தா பசு , பாஞ்சா புலி .
சண்டைன்னா சக்கரகட்டி .
சோளகொல்லை பொம்மை மாதிரி .
எறும்பூற கல் தேயும் .
ஆடிப்பட்டம் தேடி விதை .
திணை விதைத்தவன் , திணை அறுப்பான் ,
வினை விதைத்தவன் , வினை அறுப்பான் .
புலி பசித்தாலும் , புல்லை தின்னாது .
( இன்னும் வரும் அடுத்த பாகத்தில் ).....
.
ஆச்சானுக்கு பீச்சான் மதுனிக்கு உடன்பிரந்தானாமா.. What does this mean?? Please reply!
ReplyDeletethe words achaan and peechan are meaning less. This adage is used to comment on a person, who is not in a position to introduce a distant relative of him/her.
Delete